ரிப்பன் பக்கோடா!
ரிப்பன் பக்கோடா தேவையானவை: கடலை மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், ...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_62.html
ரிப்பன் பக்கோடா
தேவையானவை: கடலை
மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான
அளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களை சேர்த்து, தண்ணீர் விட்டு
கெட்டியாக பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை
கையில் எடுத்து உருண்டையாக்கி, ரிப்பன் அச்சில் போட்டு பிழிந்து
எடுக்கவும்.
Post a Comment