ஆளிவிதைகள்..அருமருந்தாகும் ! எடை குறைக்கும், முடி வளர்க்கும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்..!

 உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’...

 உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ கட்டாயம் இடம் பிடித்திருக்கும். சமீப காலமாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள், தொப்பைக் குறையும்’ என்று அறிவுறுத்துகின்றனர். சிலர் சாலட்டில் தூவியும் இதை உட்கொள்கின்றனர்.

எங்கே கிடைக்கும் இந்த ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்? எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். `அப்படியானால், இது வெளிநாடுகளில் விளையும் விலை உயர்ந்த உணவா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். இதனை `ஆளி விதை’ (Flax Seeds) என்று கூறுவார்கள். ஆனால் இதன் மகிமையை நம்மைவிட வெளிநாட்டினர் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் இது இடம் பிடித்திருக்கும்.

இந்த விதையை அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகலாம். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும்.சரி... இனி இதில் நிறைந்துள்ள சத்துகளையும், உடல் எடை குறைய இது எப்படித் துணைபுரிகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

* ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். துரித உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

* `லிக்னன்ஸ்’ (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

* குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.

* ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.

* இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி, நிறைவைத் தந்துவிடும்.

* ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும்; முடி வளர்வதற்கு உதவும்.

* ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
ஆளி விதை எண்ணெய் மற்றும் ஆளி விதை மாத்திரைகளை உட்கொள்ளலாமா? 
ஆளி விதை எண்ணெய் மற்றும் ஆளி விதைகளால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை இன்றைக்கு பலரும் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் எண்ணெயை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர, சமைக்கும்போது உபயோகிக்கக் கூடாது. ஆளிவிதை எண்ணெயை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடாக்கினால், அது உணவை ஊசிப்போக வைத்துவிடும். ஆளிவிதை மாத்திரையை நாள் ஒன்றுக்கு ஒரு முறைதான் உட்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் வழக்கமாகப் பருகும் நீரைவிட அதிக அளவில் குடிக்க வேண்டும். (ஆளி விதை மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.)

பக்கவிளைவுகள்...
* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* இதை உட்கொள்ளும் நாள்களில் அதிக அளவில் நீர் பருகவில்லை என்றால் மலச்சிக்கல் , வாய்வு போன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
* கர்ப்ப காலங்களின் ஆரம்பகட்டத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சியை பாதித்துவிடும்..
ஆளி விதைப் பொடியை உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது?

* சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

* மில்க் ஷேக், ரைத்தா, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், மோர், குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

ஆளி விதை மில்க் ஷேக் :
தேவையானவை :
தேங்காய் பால் - 1 கப்
ஆளிவிதைப் பொடி - 2 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
வாழைப்பழம் - 2 துண்டுகள்
தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை :
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
பிறகு, அதை ஒரு கிளாஸில் ஊற்றி , தேவைப்பட்டால் உலர் பழங்கள், துண்டாக நறுக்கியப் பழங்களை சேர்த்தும் பருகலாம்.
ஆளிவிதை மில்க் ஷேக் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் தரும்.

Related

மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் 3651319333862818261

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item