பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க... !

பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க... நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற...

பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க...

நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற்கும் தொல்லை தரும் தொற்றுண்ணியை தான் பொடுகு என்கிறோம். பொடுகுகளால் நமது தலையில் எரிச்சல் மற்றும் அதீத வறட்சித்தன்மை ஏற்பட்டு விடும். கற்றாழையில் உள்ள பெக்டின் என்ற வேதிப்பொருளுக்கு புதிய திசுக்கள் மற்றும் செல்களைத் தூண்டவும், உருவாக்கவும் கூடிய குணங்கள் உள்ளன. முடி ஆரோக்கியமாக இருப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நன்றாக ஊடுருவிச் செல்வதற்கு இந்த பெக்டின் உதவுகிறது. இறந்த சரும செல்கள் மற்றும் சரும பகுதிகளை உடனுக்குடன் நீக்கிட இது உதவுவதால், பொடுகுத் தொல்லையிலிருந்து சாதாரணமாக விடுபட முடியும். புதிய, ஆரோக்கியமான திசுக்களால் ஆரோக்கியமான தலைமுடியை பெற்றிட முடியும். கற்றாழையை கொண்டிருக்கும் மிதமான ஷாம்பு போட்டு, உங்களுடைய தலைமுடியை அலசி விட்டு, சரியான முறையில் குளிர்ந்த நீரில் முடியை அலசவும். எனினும், கற்றாழையை கொண்டிருக்கும் அந்த ஷாம்பு அல்லது கண்டிஷனரில், வேறு ஏதாவது சோடியம் லாரில் சல்பேட் போன்ற நச்சுப் பொருட்கள் இல்லாமலிருப்பதை பார்த்துக் கொள்ளவும். பொடுகுகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட உதவும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

1.கற்றாழை ஜெல் அல்லது சாற்றை உங்களுடைய தலையின் தோலில் நேரடியாகத் தடவி, மென்மையாக மசாஜ் செய்து விடவும். குளிப்பதற்கு முன்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த ஜெல் உங்களுடைய தலையில் இருக்க வேண்டும். இந்த வழிமுறைiயில் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 முறையாக, 15 நாட்களுக்கு செய்து வந்தால், பொடுகுகள் காணவே காணோம்!! சொரசொரப்பான, எரிச்சல் மிகுந்த சருமங்களுக்கு இந்த குளிர்ச்சியான கற்றாழை ஜெல் மிகவும் உகந்ததாகும்.
2.சிறிதளவு வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் வெந்தயத்தை வெளியிலெடுத்து அரைக்கவும். அரைக்கப்பட்ட வெந்தயத்துடன், கற்றாழை சாற்றை சேர்த்து உங்களுடைய தலையில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையற்ற எண்ணைய் மற்றும் பூஞ்சைகளின் பிடியிலிருந்து விடுபட முடியும். இந்த வழிமுறையில் உடனடியாக பலன் கிடைக்காதெனினும், சில நாட்களுக்குப் பின்னர் பலன் வெளியெ தெரியும்.

3.கற்றாழை ஜெல்லுடன், யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து பசையாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பசையை உங்களுடைய தலையில் தடவி விட்டு, மசாஜ் செய்யவும். இந்த பசையை உங்களுடைய தலையில் சுமார் 1 மணிநேரத்திற்கு வைத்திருந்து விட்டு, சாதாரண தண்ணீரில் முடியை அலசவும். இந்த இயற்கையான மூலிகைகளில் கலந்துள்ள குணப்படுத்தும் காரணிகள், உங்களுடைய தலைமுடியையும் சுத்தம் செய்கின்றன. இந்த வழிமுறையை கடைப்பிடிப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தத் தேவையில்லை.

4.புதிதாக எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு தன்னிச்சையாகவே பொடுகுகளிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குணமுடையதாகும். எனவே, பொடுகு விஷயத்தில் மிகவும் பலனுள்ளதாக எலுமிச்சை சாறு உள்ளது. பாதியளவு எலுமிச்சையை அறுத்து, அதன் சாற்றை காற்றாழை ஜெல்லுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஸ்கால்ப்பில் தடவி விட்டு, 1 மணிநேரம் பொறுத்திருங்கள். அதன் பிறகு தலைமுடியை அலசி விட்டு, மென்மையான ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

5.ஷாம்பு போடுவதற்கு முன்னதாக, கற்றாழை சாற்றை தடவிக் கொள்வது பொடுகுகளை தலைமுடியிலிருந்து அழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழையில் உள்ள இயற்கையான பொருட்கள் இறந்த செல்களை நீக்கவும் திறமையாக நீக்கவும், தலைமுடியை போதுமான அளவு ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும், சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கவும் மற்றும் மீண்டும் பொடுகுகள் வராமல் தடுக்கவும் கற்றாழை உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கற்றாழையை நன்றாக தலையில் தடவி விட்டு, 10 நிமிட நேரத்திற்கு காத்திருப்பது மட்டுமே. இதற்குப் பின்னர், ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

6.அரை கோப்பை கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டு, அதனுடன் 2 தேக்கரண்டி தேங்காண்ணெயையும், 2 தேக்கரண்டி வெந்தயத் பொடியையும் மற்றும் துளசி பொடியையும் கலந்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலக்கிக் கொண்டு, தலைமுடி  முழுமையாக மூடும் வகையில் போட்டுக் கொள்ளவும். ஷவர்-கேப் போட்டுக் கொண்டு, படுக்கையில் உறங்கச் செல்லவும். காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீரும், சிறதளவு ஷாம்புவும் போட்டு நன்றாக கழுவி இந்த கலவையை நீக்கி விடவும். இந்த ஊட்டசத்து மற்றும் சிகிச்சையளிக்கும் குணமுடைய கலவை ஒரே நாளில் உங்களுடைய  தலைமுடியை சுத்தம் செய்திடும். முடியை கண்டிஷனிங் செய்வதிலும், பொடுகுகளை விரட்டுவதிலும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இது மிகவும் பயனள்ளதாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த வழிமுறையை பயன்படுத்திப் பலன் பெறுங்கள். 

Related

சித்த மருத்துவம் 7742599388515148620

Post a Comment

2 comments

ப.கந்தசாமி said...

கற்றாழைச் சாறு எடுப்பது எப்படி என்ற தகவல் தந்தால் உபயோகமாக இருக்கும்.

MohamedAli said...

அன்பிற்கினிய அய்யா, பழனி கந்தசாமி அவர்களுக்கு அறிய தரும் தகவல். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item