மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்! உபயோகமான தகவல்கள்!!

மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்! நா டு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக...

மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.
 
சிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்... மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே விடையளிக்கிறார், சென்னையிலிருக்கும் ஸ்ரீ நவநீதலட்சுமி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வரதராஜன்.

‘‘சமையல் எரிவாயுக்காக தற்போது வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப்படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவறாகவும் பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதால், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தப் போகிறது. இந்தத் திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. அடுத்தகட்டமாக, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படும். உங்களுக்கான சிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழுவிலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலுக்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக்கும், மானிய விலைக்குமான வித்தியாசம் சலுகைப் பணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு என இரண்டு வழிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கணக்கு முக்கியம்.

ஆதார் எண் வைத்திருப்போர்!
ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதற்காக, விண்ணப்பத்தை (படிவம்-1) பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடைய சமையல் எரிவாயு ஏஜென்சியுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல்லது கேஸ் புக்கின் முதல்பக்க நகலை ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலைபேசி எண் வாயிலாக 1800- 2333- 555 பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற தொலைபேசி எண் மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கான தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழுத்தினால், இந்தத் திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.

இணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இதற்கு,  www.rasf.uiadai.gov.in என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் இணையலாம்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள்!
ஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முகவரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC' கோட்  எண்ணை  உங்கள் விநியோகஸ்தரிடம் கொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள். அல்லது விநியோகஸ்தர்களிடம் விண்ணப்பம் 3 பெற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன் பின் மானியத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.

பெயர் மாற்றம் அவசியம்!
சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கெடுவும் கருணை அடிப்படையும்!
ஜனவரி 1, 2015 முதல் இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருவதால், அதற்குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணையாதவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கருணை அடிப்படையில் மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி இணைந்துவிட வேண்டும். இல்லையென்றால், மானிய விலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டத்தில் இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு  mylpg.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம்’’ என தகவல்களை நிறைவு செய்தார் வரதராஜன்.

இந்தியா முழுக்கவே 8000 பேர்!
மானிய விலை சிலிண்டர் தேவையில்லாதவர்கள், ஆன்லைன் வழியாக  mylpg.in என்ற முகவரியில் டிஎன்எஸ்சி  (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSEHOLD CYLINDER)  என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று குறிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜென்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவதும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

Related

உபயோகமான தகவல்கள் 2644374501258872172

Post a Comment

2 comments

sury siva said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

எனினும் சில ஐயங்கள் தொடர்கின்றன.

ஆதாருக்கு விண்ணப்பித்து, அவர்களுடைய அத்தாட்சி பெற்றுக்கொண்ட என்னைப்போன்ற பலருக்கு இன்னமும் ஆதார் கார்டு வழங்கப்படவில்லை. இது குறித்த தகவல் மையத்தை தொடர்பு கொண்டபோது, டெக்னிகல் ப்ராப்ளம் காரணமாக வழங்க இயலவில்லை. என்கிறார்கள். மறுபடியும் ஆதார் கார்டு வாங்கவேண்டும் என்றால், அதற்கு என்னைப்போன்ற நடக்கக்கூட முடியாத வயோதிகர்கள் என்ன செய்வது?

இருந்தும், ஆதார் கார்டு இல்லாதவர் போன்று நான் படிவம் 3மற்றும் 4 முறையே வங்கிக்கும் காஸ் நிறுவனத்திலும் கொடுத்து விட்டேன்.

எனக்கு மார்ச் 15 க்குள்ளாக ஆதார் கார்டு கிடைக்கவில்லை எனின், மானிய விலையில் ஆதார் காஸ் கிடைக்காதா ?

அடுத்து,

இந்த நடைமுறை என்னைப் பொருத்தவரை, அரசாங்கம் காஸ் வாங்கும் நபர்களின் மாத ஆண்டு வருமானத்தை ஒரு கால கட்டத்தில் கணக்கிட்டு, ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்குள் இருப்பவர்க்கு மட்டும் இந்த மானிய விலையில் காஸ் தர முடிவு செய்யும் என நினைக்கிறேன்.

நீங்கள் வங்கி கணக்குடன் உங்கள் காஸ் எண்ணை இணைக்கும்போது, உங்களது பான் கார்டு வங்கியில் இருப்பதால், நீங்கள் வருமான வரி செலுத்துபவரா என்று தெரியும்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டு வருமானத்துக்கு மேல் உங்களது வருடாந்திர வருமானம் இருக்கும் கால கட்டத்தில், மானிய விலை, உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

சுப்பு தாத்தா. 1230

MohamedAli said...

மதிப்பிற்குரிய சுப்பு தாத்தா அவர்களுக்கு பெட்டகம் A.S. முஹம்மது அலி எழுதியது. தங்களின் யூகமான கருத்துக்கள் ஓரளவு சரியாக இருக்கின்றது. பான் கார்டு உள்ளவர்களில் வரி செலுத்தாதவர்களும் பான் கார்டு வைத்திருக்கின்றார்கள். எனவே PAN கார்டு உள்ளவர்களுக்கெல்லாம் மான்யம் நிறுத்தி விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இது எனது கருத்தாகும். மேலும் 2015 மார்ச் 31 க்குள் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டை வங்கி கணக்கில் இணைக்காதவர்களுக்கு நிச்சயமாக மானிய சிலிண்டர் வழங்கப்படமாட்டாது என்று அரசின் தற்போதைய அறிவிப்பு தெரிவிக்கின்றது. நீங்கள் மீண்டும் ஒரு முறை ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு தங்களின் ஆதார் அட்டை புதியதாக பெற முயற்சி செய்யவும்.. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கூறிடும் தங்கள் அன்பன் பெட்டகம் A.S. முஹம்மது அலி.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item