கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! சட்னிகள்!!
வழி: 1 தேவையான பொருட்கள்: கொத்தமல்லி - 1 கட்டு தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) பூண்டு - 5-6 பல் பச்சை மிளகாய...
https://pettagum.blogspot.com/2014/08/blog-post_88.html
வழி: 1
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 5-6 பல்
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய்
மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர்
ஊற்றி அரைக்க வேண்டும்.
* பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும்.
வழி: 2
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - சிறிது
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை மிளகாய், சீரகம்
சேர்த்து அரைக்க வேண்டும்.
* இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி
ரெடி!
இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த
பச்சையுடன் காணப்படும்.
1 comment
வணக்கம்
சுவையான உணவு இலகுவான செய்முறை விளக்கம்பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment